இந்தியா

பழங்குடியின பள்ளி மாணவி மீது இளைஞர் சரமாரி தாக்குதல் - முதல்வர் அதிரடி உத்தரவு

பழங்குடியின பள்ளி மாணவி மீது இளைஞர் சரமாரி தாக்குதல் - முதல்வர் அதிரடி உத்தரவு

ஜா. ஜாக்சன் சிங்

பள்ளிக்கு சென்றுக் கொண்டிருந்த பழங்குடியின மாணவி மீது இளைஞர் ஒருவர் சரமாரியாக தாக்குதல் நடத்தும் வீடியோ ஜார்க்கண்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் நேற்று ஒரு வீடியோ வைரலாக பரவியது. அந்த வீடியோவில், ஒரு பள்ளி மாணவியை இளைஞர் ஒருவர் சரமாரியாக எட்டி உதைக்கிறார். அந்த மாணவி வலி தாங்க முடியாமல் அமர்ந்த போதிலும் அந்த இளைஞர் விடாமல் தொடர்ந்து மாணவியை தாக்குகிறார். இந்த வீடியோவை பார்த்த பலரும் இளைஞரின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

<blockquote class="twitter-tweet"><p lang="hi" dir="ltr">एक लड़का एक आदिवासी लड़की को बुरी तरह से मार रहा है और दूसरे लड़के इसकी विडियो बना रहे हैं. लड़की St Stanislaus H S hathimara पाकुड़ में पढ़ती है और लड़का रोलामारा गाँव, महेशपुर ब्लॉक, पाकुड़ जिले का है. आदिवासी महिलाओं pr लगातार हिसंक विडियो होते हैं <a href="https://twitter.com/Alamgircongress?ref_src=twsrc%5Etfw">@Alamgircongress</a> <a href="https://t.co/sY97FrUBy2">pic.twitter.com/sY97FrUBy2</a></p>&mdash; Rajni Murmu (@murmu_rajni) <a href="https://twitter.com/murmu_rajni/status/1527985836037267456?ref_src=twsrc%5Etfw">May 21, 2022</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

இந்நிலையில், இந்த வீடியோவானது முதல்வர் ஹேமந்த் சோரனுக்கும் ட்விட்டரில் 'டேக்' செய்யப்பட்டது. இதனைக் கண்ட முதல்வர் ஹேமந்த் சோரன், உடனடியாக இந்த சம்பவம் குறித்து விசாரித்து சம்பந்தப்பட்ட இளைஞர் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையினருக்கு உத்தரவிட்டார். இதன்பேரில் போலீஸார் நடத்திய விசாரணையில், பாக்கூர் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடைபெற்றதும், தாக்குதலுக்கு உள்ளான மாணவி பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. தாக்குதல் நடத்திய இளைஞரை போலீஸார் தேடி வருகின்றனர். எதற்காக அந்த இளைஞர் மாணவியை தாக்கினார் என்பது தெரியவில்லை.