மும்பை முகநூல்
இந்தியா

”யாரும் வரவேண்டாம்”- பள்ளியில் படித்த அறிவியல் பாடத்தை நினைவில்வைத்து உயிரை காத்த பள்ளிச்சிறுவர்கள்!

பள்ளியில் படித்த அறிவியல் பாடத்தை வாழ்க்கையிலும் ஒப்பிட்டு, விபத்து நேரா வண்ணம் தடுத்திருக்கிறார் மும்பையை சேர்ந்த பள்ளிப்பயிலும் இரண்டு குழந்தைகள்.

ஜெனிட்டா ரோஸ்லின்

பள்ளியில் படித்த அறிவியல் பாடத்தை வாழ்க்கையிலும் ஒப்பிட்டு, விபத்து நேரா வண்ணம் தடுத்திருக்கிறார் மும்பையை சேர்ந்த பள்ளிப்பயிலும் இரண்டு குழந்தைகள்.

மும்பையில் வசித்துவரும் அறிவியல் ஆசிரியரான தர்ஷனுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. கடந்த ஆகஸ்ட் 25 ஆம் தேதி மதியம், தர்ஷணின் மகன் ஸ்மித் பண்டாரே (வயது 12 ), வீட்டுப்பாடங்களை செய்து கொண்டிருக்க..ஸ்மித்தின் சகோதரி சமஸ்க்ருதி வீட்டில் விளையாடி கொண்டுள்ளார்..

தந்தை தர்ஷன் வீட்டிலுள் அமர்ந்திருக்க, இவரது மனைவி மற்றும் வீட்டின் பணிப்பெண் இருவரும் இணைந்து மதிய உணவிற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறார்கள்.

அப்போது, பலத்த காற்றும், மழையும் வீசவே அருகிலிருந்த மின்கம்பத்திலிருந்து உயர் மின்னழுத்த மின் கம்பி அறுந்து அருகிலுள்ள வசந்த விஹார் கட்டிடத்தின் வாயிலில் விழுந்து கிடப்பதை சிறுவன் ஸ்மித் கண்டுள்ளார்.

அப்போது, உடனடியாக அடுக்குமாடி குடியிருப்பின் இரண்டாவது மாடியின் பால்கனியை நோக்கி ஓடிய ஸ்மித், ”அவ்வழியில் யாரும் வரவேண்டாம்” என்று கூறிக்கொண்டே சென்றுள்ளார். காரணம், ஸ்மித் தான் முந்தைய ஆண்டு அறிவியலில் படித்த நல்ல மற்றும் கெட்ட மின்கடத்திகள் குறித்து நினைவு கூர்ந்ததுதான்..

ஏனெனில், இந்த உயர்ழுத்த மின்கம்பி நீரில் விழுந்தால் ஏற்படும் அபாயத்தையும் நன்கு அறிந்திருந்தார் ஸ்மித்..எனவே, தான் நின்றுக்கொண்டிருந்த பால்கனியிலிருந்து யாரும் விஹார் கட்டிடத்தின் நுழைவாயிலில் நுழைய வேண்டாம் என்று கூச்சலிட்டு எச்சரித்துள்ளார்.

இதை கண்ட ஸ்மித்தின் சகோதரி சமஸ்க்ருதியும், ஸ்மித் காரணம் இல்லாமல் கூச்சலிடமாட்டான் என்று உணர்ந்து ஸ்மித்துடன் இணைந்து கூச்சலிட்டுள்ளார். அப்போது, முகமது அன்சாரி என்ற 10 வயது சிறுவன் நுழைவு வாயின் வழியாக நுழைய முற்பட்டுள்ளார்.. இதனை கண்ட இருவரும் மீண்டும் சத்தமாக நுழைய வேண்டாம் என்று கத்தியுள்ளார்.

இதனை கண்ட முகமது அன்சாரியும் இரும்பு கேட்டை தொடாமல் அங்கிருந்து விலகி சென்றார்.

பிறகு, இதனை புரிந்து கொண்ட குழந்தைகளின் தந்தை தர்ஷன் உடனடியாக மகாராஷ்டிரா மாநில மின்சாரா வாரியத்தை தொடர்பு கொண்டு நிலைமையை தெரிவித்துள்ளனர்.

அப்போது, டெலிவரி ஏனெஜட் ஒருவர் அவ்வழியாக வரவே, அவரையும் கேட்டை தொடாதபடி இச்சிறுவர்கள் கூச்சலிட்டு காப்பாற்றியுள்ளனர். இதன் பிறகு, MSEB அதிகாரிகள் அவ்விடத்திற்கு விரைந்து நிலையை சரிசெய்தனர்.

இப்படி, தான் கற்றுக்கொண்ட அறிவியல் பாடத்தை வாழ்க்கையுடன் ஒப்பிட்டுப்பார்த்து, பலரின் உயிரை காப்பாற்றிய இச்சிறுவர்களுக்கு இணையதளத்தில் பாராட்டுகள் குவிந்த வண்ணன் உள்ளது.