இந்தியா

ரூபாய் நோட்டின் அளவு பெரிதாக இருப்பது இப்போதுதான் தெரிகிறதா?: மும்பை உயர்நீதிமன்றம்

ரூபாய் நோட்டின் அளவு பெரிதாக இருப்பது இப்போதுதான் தெரிகிறதா?: மும்பை உயர்நீதிமன்றம்

rajakannan

ரூபாய் நோட்டின் அளவு பெரிதாக இருப்பதை உணர இத்தனை வருடங்கள் ஆகிவிட்டதா என மும்பை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது. அதற்கு பதில் புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்தது. பின்னர், இந்திய ரூபாய் நோட்டுகள் புதிய வண்ணங்கள், வடிவங்களில் வெளியாகி வந்து கொண்டிருக்கின்றன. 10, 50, 100, 200 ரூபாய்க்கு புதிய நோட்டுகளை ரிசர்வ் வங்கி இதுவரை அறிமுகம் செய்துள்ளது. 

இந்நிலையில், ரூபாய் நோட்டுகள் தொடர்பாக மும்பை உயர்நீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கி சார்பில், “பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு ரூபாய் நோட்டுகளின் அளவு மாற்றப்பட்டுள்ளதாக தற்போது கொண்டு செல்வதற்கு எளிமையாக உள்ளது. டாலர் நோட்டுகளை போன்ற அளவில் ரூபாய் நோட்டுகள் தற்போது உள்ளன” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, “இந்திய ரூபாய் நோட்டுகளின் அளவு பெரிதாக உள்ளது என்பது கொண்டு செல்வதற்கு எளிதாக இல்லை என்பதையும் உணர உங்களது இத்தனை வருடங்கள் ஆகியுள்ளதா?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.