இந்தியா

தினமும் ஒரு டம்ளர் கோமியம் குடிப்பேன்: அக்‌ஷய் குமார்

தினமும் ஒரு டம்ளர் கோமியம் குடிப்பேன்: அக்‌ஷய் குமார்

JustinDurai
ஆயுர்வேத காரணங்களுக்காக தினமும் ஒரு டம்ளர் மாட்டு கோமியம் குடித்து வருவதாக தெரிவித்துள்ளார் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார்.
 
டிஸ்கவரி சேனல் புகழ் பியர் க்ரில்ஸின் ‘Into The Wild With Bear Grylls’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, நடிகர் ரஜினிகாந்த் ஆகியோரை தொடர்ந்து பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாரும் கலந்து கொண்டுள்ளார்.
 
கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த நிகழ்ச்சியின் முன்னோட்டம் ஒன்றைப் பகிர்ந்திருந்தார் அக்‌ஷய் குமார். அதில் பியர் கிரில்ஸ் உடன் சேர்ந்து யானைக் கழிவில் போடப்பட்ட டீ அருந்திய காட்சி இடம்பெற்றது. இது சமூக வலைதளங்களில் வைரலானது.
 
 
இந்நிலையில் தனது அடுத்த படமான ‘பெல்பாட்டம்’ படத்தின் படப்பிடிப்புக்காக தற்போது ஸ்காட்லாந்தில் இருக்கிறார் அக்‌ஷய்குமார். இப்படத்தின் நாயகிகளான லாரா தத்தா, ஹூமா குரேஷி, பியர் கிரில்ஸ் ஆகியோருடன் இணைந்து ஒரு இன்ஸ்டாகிராம் நேரலை நிகழ்வை அக்‌ஷய்குமார் நடத்தினார்.
 
இதில் நடிகை ஹூமா குரேஷி அக்‌ஷய் குமாரிடம் எப்படி யானை கழிவில் தயாரிக்கப்பட்ட டீயை எப்படி குடித்தீர்கள் என்று கேட்டார்.
 
அதற்கு பதிலளித்த அக்‌ஷய் குமார், '‘நான் கவலைப்படவில்லை. நான் மிகவும் ஆர்வமாக இருந்தேன். ஆயுர்வேத மருத்துவ காரணங்களுக்காக நான் தினமும் ஒரு டம்ளர் பசு கோமியம் குடித்து வருகிறேன். எனவே அது எனக்கு ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை’ என்றார்.