இந்தியா

போயிங் 737 மேக்ஸ் விமானங்களுக்குத் தடை எதிரொலி: டிக்கெட் கட்டணம் திடீர் உயர்வு!

போயிங் 737 மேக்ஸ் விமானங்களுக்குத் தடை எதிரொலி: டிக்கெட் கட்டணம் திடீர் உயர்வு!

webteam

போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், விமானப் பயணக் கட்டணம் 20 சதவிகிதத்தில் இருந்து 25 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது.

எத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா நகரில் இருந்து எத்தியோப்பிய ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான போயிங் 737 விமானம் 149 பயணிகள், 8 ஊழியர்களுடன் கென்யா தலைநகர் நைரோபிக்கு புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானம் விபத்துக்குள்ளானது. இதில், விமான த்தில் பயணித்த 157 பேரும் உயிரிழந்தனர்.

ஐந்து மாதங்களில் போயிங் ரக விமானம் இரண்டாவது முறையாக விபத்தை சந்தித்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் இந்தோனேஷியாவில் லயன் ஏர் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 189 பேர் உயிரிழந்தனர். தற்போது எத்தியோப் பியாவில் இரண்டாவது விபத்து நிகழ்ந்துள்ளது. இரண்டு விபத்துமே ஒன்று போலவே நடந்துள்ளதாலும் இரு விமானங்களுமே போயிங் ரகத் தை சேர்ந்தவை என்பதாலும் இந்த விமானத்தின் பாதுகாப்பு குறித்து பல்வேறு நாடுகள் அச்சம் அடைந்துள்ளன.  இந்நிலையில், போயிங் 777 மேக்ஸ் 8 ரக விமானங்களுக்கு அமெரிக்காவும் தடை விதித்துள்ளது. 

இதையடுத்து ‘போயிங் 737 மேக்ஸ்-8' ரக விமானங்கள் அனைத்தையும் எத்தியோப்பியா நிறுத்தியது. அதே போல சீனா, இந்தோனேஷியா, சிங் கப்பூர், அயர்லாந்து, ஆஸ்திரேலியா, பிரிட்டன், ஜெர்மனி உட்பட பல நாடுகள், போயிங் ரக விமானங்களின் சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன. இந்நிலையில் இந்தியாவும் இந்த ரக விமானங்களை இயக்க நேற்று முன் தினம் தடை விதித்தது.

 இதையடுத்து ஸ்பைஸ்ஜெட், ஜெட் ஏர்வேஸ் நிறுவனங்கள் தங்கள் விமானங்களை நிறுத்திவிட்டன. இதைத் தொடர்ந்து முக்கிய நகரங்களுக் குச் செல்லும் விமானச் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து கடைசி நிமிட விமானப் பயணக் கட்டணம் பன்மடங்கு அதிகரித்துள்ளது. சென்னையிலிருந்து மும்பைக்குச் செல்ல விமானக் கட்டணம் சுமார் 5 ஆயிரம் ரூபாயாக இருந்த நிலையில், இன்று 4 மடங் கு அதிகரித்து 20 ஆயிரம் ரூபாயாக உள்ளது. சென்னையிலிருந்து‌ டெல்லி செல்ல கடந்த ஆண்டு இதே நாளில் விமானக் கட்டணம் சுமார் 4 ஆயிரம் ரூபாயாக இருந்தது. இன்று சுமார் 8 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது. விமானக் கட்‌டணம் கடுமையாக உயர்ந்துள்ளதால் பயணிகள் சிரமமடைந்துள்ளனர்.