இந்தியா

தவறான சமூக வலைத்தளத்தால் சிக்கலில் சிக்கிய பெண்

webteam

தவறான சமூக வலைத்தளம் ஒன்றில் தனது செல்போன் நம்பர் மற்றும் புகைப்படங்கள் பகிரப்பட்டதால் பெண் ஒருவர் சிக்கலில் சிக்கிய சம்பவம் பெங்களூரில் நிகழ்ந்துள்ளது.

பெங்களூருவை சேர்ந்த 22 மதிக்கத்தக்க பெண் ஒருவர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் தன் செல்போன் நம்பர் மற்றும் புகைப்படங்கள், தவறான வலைத்தளம் (வாடகை பாலியல் பெண்கள்) ஒன்றில் பகிரப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறும் குறிப்பிட்டிருந்தார். ஆனால் இதுதொடர்பாக இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பெண் குற்றம்சாட்டியுள்ளார்.

முன்னதாக அப்பெண்ணிற்கு, வாட்ஸ்அப்பில் பாலியல் அழைப்புகள் தொடர்ச்சியாக வந்துள்ளன. பலரும் அப்பெண்ணை வாட்ஸ் அப்பில் தொடர்புகொண்டு, பாலியல் ரீதியாக அழைத்துள்ளனர். இதனால் அதிருப்தி அடைந்த அப்பெண் 70 வாட்ஸ் அப் நபர்களின் தொலைபேசி எண்ணை முடக்கியுள்ளார்.

இதைத்தொடர்ந்து ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களிலும் அப்பெண்ணுக்கு இதேபிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தி அடைந்த அப்பெண் தனது அனைத்து சமூக வலைத்தள கணக்குகளை ரத்து செய்துள்ளார். இதுதொடர்பாக கூறும் சமூக வலைத்தள நிபுணர்கள், பெண் பெரும்பாலும் தங்கள் புகைப்படங்கள் மற்றும் தொலைபேசி எண்களை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதை தவிர்ப்பது நல்லது என தெரிவித்துள்ளனர். அண்மைக்காலமாக மியூஸிக்கலி போன்ற அப்-களில் பெண்கள் அதிகமாக வீடியோக்களில் நடித்து பதிவிடுவது குறிப்பிடத்தக்கது.