இந்தியா

எழுத்தாளர் மீது கருப்பு மை வீச்சு

Rasus

இந்துக் கடவுள்களுக்கு எதிராக எழுதக் கூடாது என எச்சரித்து, கர்நாடகாவில் முற்போக்கு எழுத்தாளர் மீது கருப்பு மை வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னட எழுத்தாளர் யோகேஷ் மாஸ்டர், சில வருடங்களுக்கு முன் ’துண்டி’ என்ற நாவலை எழுதியிருந்தார். கவனம் பெற்ற இந்த நாவலில் இந்து கடவுள்களை இழிவுப் படுத்தியிருப்பதாக இந்துத்துவ அமைப்புகள் கூறி வந்தன.

இந்நிலையில் பெங்களூர் தாவணகெரேவில் நடந்த ஒரு கூட்டம் ஒன்றில் பங்கேற்க வந்திருந்தார், யோகேஷ் மாஸ்டர். இதைத் தெரிந்து கொண்ட, சுமார் 9 பேர் கொண்ட கும்பல் கருப்பு மை வீசிவிட்டுத் தப்பி சென்றுள்ளது. இந்துக் கடவுள்களை விமர்சித்து எழுதக் கூடாது என்றும், ஜெய் ஸ்ரீராம் எனவும் தாக்குதல் நடத்தியவர்கள் முழக்கமிட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் செய்தார் யோகேஷ் மாஸ்டர். இதையடுத்து இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.