இந்தியா

எம்பிக்களின் வாரிசுகளுக்கு இடைத்தேர்தலில் சீட் இல்லை - பாஜக முடிவு

எம்பிக்களின் வாரிசுகளுக்கு இடைத்தேர்தலில் சீட் இல்லை - பாஜக முடிவு

webteam

மக்களவைத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பிக்களின் வாரிசுகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு வரும் இடைத்தேர்தல்களில் சீட் கிடையாது என பாஜக முடிவு செய்துள்ளது. 

மக்களவைத் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றிபெற்ற பாஜக, தனிப்பெரும்பான்மையுடன் 2-வது முறையாக ஆட்சியை தக்கவைத்துள்ளது. இரண்டாவது முறையாக மோடி பிரதமராக பதவியேற்றுள்ளார். 

காலம் காலமாக வாரிசு அரசியலை காங்கிரஸ் கட்சி கையாண்டு வருவதாக குற்றம் சாட்டி வந்த பாஜக, மக்களவைத் தேர்தலில் பல அரசியல் தலைவர்களின் வாரிசுகளுக்கு சீட் கொடுத்தது. 

இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் 12 இடங்களில் இடைத்தேர்தல்கள் நடைபெற உள்ளது. அங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களின் குடும்ப உறுப்பினர்கள் சிலர் ஏற்கனவே தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ளனர். இந்த விவகாரம் குறித்து கட்சிக்கு அறிவிக்கப்பட்ட பின்னர், தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களின் குடும்ப உறுப்பினர்கள் அல்லது உறவினர்களுக்கு டிக்கெட் கொடுக்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளது.

கடின உழைப்பாளிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு சீட் கொடுத்தால் அது வெற்றிக்கு வழிவகுக்கும் என பாஜக முடிவு செய்துள்ளது. சமீபத்தில் நடைபெற்ற பாஜக முக்கிய குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.