இந்தியா

மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்த வேண்டாம் : அமித்ஷா

மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்த வேண்டாம் : அமித்ஷா

webteam

பாஜகவின் புதிய மாவட்ட அலுவலகத்தை திறந்து வைப்பதற்காக கேரள மாநிலம் கண்ணூர் வந்திருந்தார் பாஜக தலைவர் அமித்ஷா. அலுவலகத்தை திறந்து வைத்த அவர், பொதுக்கூட்டத்திலும் உரையாற்றினார். சபரிமலை விவகாரத்தில் ஏற்பட்ட வன்முறைக்கு பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் ஆகியவையே காரணம் என கேரள முதல்வர் கூறிய அவருக்கு பதிலளிக்கும் வகையில் அமித்ஷாவின் உரை இருந்தது

மேடையில் பேசிய அமித்ஷா “பாஜகவை பொருத்தவரை எப்போதும் சபரிமலை பக்தர்கள் பின்னும் அவர்கள் கடவுள் மேல் கொண்டுள்ள நம்பிக்கையின் பின்னுமே எப்போதும் நிற்கும். உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது என்பதை மட்டும் வைத்துக் கொண்டு வன்முறையை உருவாக்க நினைக்க வேண்டாம். சபரிமலையில் எப்படி பெண்கள் அனுமதிகப்படுவதில்லையோ அதே போல் ஆண்களை அனுமதிக்காத பல கோயில்கள் இந்தியாவில் உள்ளன” என்றார்

தொடர்ந்து பேசிய அவர் “நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஐயப்பன் கோயில்களில் பெண்களுக்கு அனுமதி உண்டு, பாஜக எப்போதும் பெண்களுக்கு சம உரிமை என்ற எண்ணத்திலேயே செயல்பட்டு வருகிறது. அதற்காக ஆலயங்களுக்குள் அவர்களை அனுமதிப்பதன் மூலம் ஒரு நம்பிக்கையை உடைத்து விட்டு சம உரிமையை பேச வேண்டியதில்லை, பக்தர்களுக்கு ஆதரவாக போராடிய பாஜக தொண்டர்களை கைது செய்யும் முதல்வரை எச்சரிக்கிறேன், பக்தர்களின் மனங்களை, நம்பிக்கையை புண்படுத்த வேண்டாம்” என்றார்.