குஜராத்தில் முக்கியத்துவம் வாய்ந்த கோத்ரா தொகுதியில் பா.ஜ.க. நூலிழையில் வெற்றி பெற்றது.
குஜராத்தின் கோத்ராவில் கடந்த 2002ஆம் ஆண்டு சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் தீவைத்து கொளுத்தப்பட்டதில் 58 கரசேவகர்கள் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் பயங்கர கலவரம் வெடித்தது. அந்த வருடம் நடந்த தேர்தலில் கோத்ரா தொகுதியில் பா.ஜ.க. தோல்வியை தழுவியது. அதன் பிறகு தற்போது அந்த தொகுதியில் பா.ஜ.க.வேட்பாளர் நூலிழையில் வெற்றி பெற்றிருக்கிறார்.
காங்கிரஸில் அதிருப்தி காரணமாக வெளியேறி பா.ஜ.க.வில் இணைந்து போட்டியிட்ட சி.கே.ரவுல்ஜி 258 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ராஜேந்திரா பர்மாரை தோற்கடித்தார். கோத்ரா தொகுதியில் நான்கில் ஒரு பங்கினர் இஸ்லாமிய சமூகத்தினர் வசித்த போதிலும், அங்கு போட்டியிட்ட நான்கு இஸ்லாமிய வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர். ஆனால் சுயேட்சை ஒருவர் 18ஆயிரம் வாக்குகள் பெற்றார்.