சுரேஷ் கோபி எக்ஸ் தளம்
இந்தியா

கேரளா| ” 'இந்தியாவின் தாய்' இந்திரா காந்தி”-திடீரென காங். புகழ்பாடிய பாஜக அமைச்சர் சுரேஷ் கோபி!

மத்திய இணை அமைச்சரும், கேரளாவைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் முதல் மக்களவை எம்.பி.யுமான சுரேஷ் கோபி, மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை 'இந்தியாவின் தாய்' என்று கூறியதாக கூறப்படுகிறது.

Prakash J

பாஜக அமைச்சர் சுரேஷ் கோபி, தனது தொகுதியான திருச்சூர் புங்குன்னத்தில் அமைந்துள்ள கருணாகரனின் நினைவிடமான முரளி மந்திரத்திற்குச் சென்ற பின்பு செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அளித்த பேட்டியில், இந்திராகாந்தியை ’இந்தியாவின் தாய்’ என்றும், மறைந்த காங்கிரஸ் முதல்வர் கே.கருணாகரன் மற்றும் மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் ஈ.கே. நாயனார் இருவரையும் தனது ’அரசியல் குருக்கள்’ என்றும் விவரித்தார். மேலும், கருணாகரன் நினைவிடத்திற்கு வருகை தருவதில் எந்த அரசியல் சாயத்தையும் சேர்க்க வேண்டாம்; தனது குருவுக்கு மரியாதை செலுத்த வந்ததாகவும் கூறினார்.

இதையும் படிக்க: கர்நாடகா கொலை வழக்கு|கார் டிரைவர் அளித்த பகீர் வாக்குமூலம்.. நடிகர் தர்ஷனை பாதுகாக்கும் காங். ஆட்சி?

நடிகர் சுரேஷ் கோபி திருச்சூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வேட்பாளர் வி.எஸ்.சுனில்குமாரை கிட்டத்தட்ட 75,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியின்மூலம் பாஜக, முதல்முறையாக கேரளத்தில் காலூன்றியுள்ளது. அதேநேரத்தில், சுரேஷ் கோபிக்கும் மத்திய சுற்றுலாத் துறை இணையமைச்சர் பொறுப்பை மத்திய பாஜக அரசு வழங்கியது.

முன்னதாக, தன்னை அமைச்சர் பதவியிலிருந்து விடுவிக்குமாறு சுரேஷ் கோபி பாஜக தலைமையைக் கேட்டுக்கொண்டதாகவும், பின்னர் தாம் பதவி விலகுவதாக வந்த செய்திகள் தவறானவை எனவும் அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ’லவ்வரோட அப்பா போட்ட கண்டிஷன்..’ சுவாரஸ்ய பதிவுடன் வேலை கேட்டு விண்ணப்பித்த நபர்.. #Viral