இந்தியா

ராம்நாத் கோவிந்த் பற்றி சமூகவலைத்தளங்களில் பரவிவரும் சர்ச்சைக்குரிய கருத்து

ராம்நாத் கோவிந்த் பற்றி சமூகவலைத்தளங்களில் பரவிவரும் சர்ச்சைக்குரிய கருத்து

webteam

பாஜகவின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் மீதான சர்ச்சைக்குரிய கருத்து ஒன்று தற்போது சமூகவலைத்தளங்களில் அதிகமாக பரவி வருகிறது.

2010 ஆம் ஆண்டு பாரதிய ஜனதாவின் செய்தித்தொடர்பாளராக நியமிக்கப்பட்ட ராம்நாத், மதம் மாறிய தாழ்த்தப்பட்டோருக்கு 15 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்ற ரங்கநாத் மிஸ்ரா கமிஷனின் பரிந்துரையை எதிர்த்தார். தாழ்த்தப்பட்ட மக்கள் கிறிஸ்துவ மதத்தையோ அல்லது இஸ்லாமிய மதத்தையோ தழுவினால் அவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கக் கூடாது என்று வலியுறுத்தினார். ரங்கநாத் மிஸ்ரா கமிஷனின் பரிந்துரையை ரத்து செய்ய வேண்டும் என்று ராம்நாத் தெரிவித்தார். அப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ராம்நாத் கோவிந்த்தின் இந்த கருத்து தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பரவி வருகிறது.