இந்தியா

“அரசியலில் இருந்து விலகுகிறேன்” - பாஜக எம்.பி பாபுல் சுப்ரியோ

Veeramani

முன்னாள் மத்திய அமைச்சரும், மேற்கு வங்கத்தை சேர்ந்த பாஜக மக்களவை எம்பியுமான பாபுல் சுப்ரியோ பாஜக மற்றும் அரசியலை விட்டு வெளியேறுவதாக அறிவித்திருக்கிறார்.

பாலிவுட் பாடகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய பாபுல் சுப்ரியோ இது தொடர்பாக வெளியிட்டிருக்கும் ட்விட்டர் பதிவில், “குட்பை. நான் எந்த அரசியல் கட்சிக்கும் போகவில்லை. திரிணாமூல் , காங்கிரஸ், சிபிஎம் கட்சிகள் யாரும் என்னை அழைக்கவில்லை, நான் எங்கும் போகவில்லை.  சமூகப் பணிகளைச் செய்ய ஒருவர் அரசியலில் இருக்க வேண்டியதில்லை. இருப்பினும், நான் வேறு எந்த கட்சியிலும் சேரவில்லை, என்றும், எப்போதும் " என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பாபுல் சுப்ரியோ தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்துள்ளார். மேலும் ஒரு மாதத்திற்குள் தனக்கு அரசு ஒதுக்கிய குடியிருப்பையும் காலி செய்வதாக் தெரிவித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்னர் மோடி அரசின் அமைச்சரவை மாற்றத்தின் ஒரு பகுதியாக, சுப்ரியோ மத்திய சுற்றுச்சூழல் இணை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 2014 ஆம் ஆண்டில் பாஜகவில் இணைந்த சுப்ரியோ, அந்த ஆண்டே அசன்சோல் தொகுதியின் எம்.பியாக வெற்றிபெற்றார். மோடியின் முதல் அமைச்சரவையில் மத்திய அமைச்சராக இவர் பதவி வகித்தார்.