இந்தியா

வேட்பு மனுவை தாக்கல் செய்தார் ராம்நாத் கோவிந்த்

வேட்பு மனுவை தாக்கல் செய்தார் ராம்நாத் கோவிந்த்

Rasus

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக போட்டியிடும் ராம்நாத் கோவிந்த் தனது வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்தார்.

அவரது வேட்புமனுத் தாக்கலின் போது பிரதமர் மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா, உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்பட பலர் உடனிருந்தனர். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் ஆகியோரும் இதில் பங்கேற்றனர்.

தற்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் வரும் ஜூலை 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. புதிய குடியரசுத் தலைவரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் ஜூலை 17-ம் தேதி நடைபெற உள்ளது.

இந்தத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக, பீகார் ஆளுநராக இருந்த ராம்நாத் கோவிந்த் கடந்த 19-ம் தேதி அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் ராம்நாத் கோவிந்த் தனது வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தார்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் சார்பில் மீராகுமார் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.