காஷ்மீர் சட்டப்பேரவையில் தேசிய கீதம் அவமதிக்கப்பட்ட சர்ச்சையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் மக்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என பாரதிய ஜனதா வலியுறுத்தியுள்ளது.
காஷ்மீர் சட்டப்பேரவை மற்றும் சட்ட மேலவை கூட்டத்தின் தொடக்கத்தில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அப்போது காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டு கட்சிகளின் உறுப்பினர்கள் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர். இது தேசிய கீதத்தை அவமதிக்கும் செயல் என்றும் காங்கிரஸ் உறுப்பினர்களின் இத்தகைய செயலுக்கு சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் மக்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என காஷ்மீர் மாநில பாரதிய ஜனதா தலைவர் ரவீந்தர் ரெய்னா கூறினார்.
இது குறித்து கருத்து தெரிவித்த காஷ்மீர் சட்டப்பேரவை சபாநாயகர் கவிந்தர் குப்தா, இதுபோன்ற விரும்பத்தகாத நிகழ்வுகள் இனியும் நடக்கக் கூடாது என்றார்.