ஹரியானா முகநூல்
இந்தியா

ஹரியானாவில் ஹாட்ரிக் வெற்றி.. மீண்டும் ஆட்சி அமைக்கும் பாஜக.. காங்கிரஸ் பின்னடைவுக்கு காரணம் என்ன?

ஹரியானாவில் பாஜக தொடர்ச்சியாக 3 ஆவது முறையாக ஆட்சி அமைக்கும்ச் சூழல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஹரியானா வரலாற்றில் ஒரு கட்சி தொடர்ந்து 3 முறை ஆட்சி அமைத்ததே இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜெனிட்டா ரோஸ்லின்

ஹரியானாவில் பாஜக தொடர்ச்சியாக 3 ஆவது முறையாக ஆட்சி அமைக்கும்ச் சூழல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஹரியானா வரலாற்றில் ஒரு கட்சி தொடர்ந்து 3 முறை ஆட்சி அமைத்ததே இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஹரியானாவின் 15 ஆவது சட்டமன்ற தேர்தலான கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி, ஒரே கட்டமான 90 சட்டமன்ற தொகுதிகளிலும் நடைப்பெற்றது. இதில், பதிவான மொத்த வாக்குக்களின் சதவீதம் 67.90.

இதில், முக்கிய கட்சிகளாக, பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி, இந்திய தேசிய லோக் தளம்- பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி , ஜனநாயக ஜனதா கட்சி - ஆசாத் சமாஜ் கட்சி கூட்டணி ஆகியன இம்மாநிலத்தின் மூத்த கட்சிகள் ஆகும்.

இந்தநிலையில்தான், காலை 8 மணி அளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே பாஜக - காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. முதல் இரண்டு சுற்றுக்களில் காங்கிரஸ்தான் முன்னிலை பெற்றிருந்தது..பாஜக பின்னடைவடைந்திருந்தது.

மேலும், தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பில்கூட ஹரியான சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மையை பெற்று ஆட்சி அமைக்கும் என்றுதான் முடிவுகள் வெளிவந்திருந்தது.. இதனால், காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சியில் கொண்டாடத்தில் ஈடுபட்டனர். ஆனால், தற்போதைய சூழல் இதற்கு மாறான சூழல் நிலவி வருகிறது,

இதன்படி, காலை 1 மணி நிலவரப்படி, பாஜக 49 , காங்கிரஸ் 34 இடங்கள் மற்றவை 7 இடங்களில் முன்னிலை வகிக்கின்றனர். இதன்மூலம், 49 இடங்களில் பாஜக முன்னிலை வகிக்கிறது.

ஹரியானாவில் காங்கிரஸ் பின்னடைவு: திடீர் திருப்பம் ஏற்பட்டது ஏன்?

தொடர்ந்து 10 வருடங்களாக பாஜக ஆட்சி நடைபெறும் சூழலில்..

  • மாநில அரசின் மீது மக்களுக்கு ஏற்பட்ட அதிருப்தி,

  • மல்யுத்த வீரர்கள் போராட்டம்,

  • விவசாயிகள் போராட்டம்

என இவை அனைத்தும் பாஜகவிற்கு பாதகமான சூழலலையும் காங்கிரஸ் ஆட்சி அமைப்பதற்கு சாதகமான ஏற்படுத்தும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது நிலவரம் மாறியுள்ளது.

இது குறித்து அரசியல் விமர்சகங்கர்கள் சொல்வதென்ன?

  • காங்கிரஸ் கட்சியிலுள் நடந்த உட்கட்சி மோதல். அதாவது பூபிந்தர் சிங் ஹூடா கோஷ்டி மற்றும் குமாரி செல்ஜா கோஷ்டி இருவருக்கும் இடையேயான முதலமைச்சர் பதவிக்கான போட்டி.

பூபிந்தர் சிங் ஹூடா- குமாரி செல்ஜா
  • குமாரி செல்ஜா..m

  • ஹூடாவை முன்னிருத்தி இருப்பதால் , ஜாட் சமூக வாக்குகள் கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், ஹூடாதான் முதல்வர் ஆவாரா என்ற கேள்வி குறியால் இவ்வாக்குகளும் சுயேட்சைகளுக்கு பிரிந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மனோகர் லால் கட்டார்
  • மல்யுத்த நட்சத்திரங்கள் வினேஷ் போகட், பஜ்ரங் புனியா ஆகியோரை காங்கிரஸில் இணைத்து பலன் கிடைக்கவில்லை.

  • மேலும், முதல்வராக இருந்த பாஜகவின் மனோகர் லால் கட்டாரை அகற்றி நயாப் சிங் சைனியை அம்மாநில முதல்வராக கொண்டுவந்தது பாஜக. இதனால் , மநில அரசின் மீது இருந்த மக்களுக்கு இருந்த அதிருப்தி தணிந்து பாஜகவிற்கு சாதகமான சூழலை உருவாக்கி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

  • பாஜகவின் முக்கிய அமைச்சர்கள் பலர் ஹரியானாவில் பூத் அமைத்து முகாம்களை இட்டு தொடர்ந்து தேர்தல் பணிகளை மேற்கொண்டுவந்தனர்; இதன் காரணமாகவே,வெற்றி பாஜக பக்கள் திரும்பி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.