ஹரியானா முகநூல்
இந்தியா

ஹரியானா நிலவரம் | காங்கிரஸை பின்னுக்கு தள்ளி முன்னேறிய பாஜக.. தலைகீழாக மாறிய முன்னிலை நிலவரம்!

காலை 10 மணி நிலவரப்படி, ஹரியானவில் காங்கிரஸை பின்னுக்கு தள்ளி பாஜக முன்னிலை வகித்து வருவதை முன்னிலை நிலவரங்கள் காண்பிக்கிறது.

ஜெனிட்டா ரோஸ்லின்

காலை 10 மணி நிலவரப்படி, ஹரியானவில் காங்கிரஸை பின்னுக்கு தள்ளி பாஜக முன்னிலை வகித்து வருவதை முன்னிலை நிலவரங்கள் காண்பிக்கிறது.

ஹரியானாவில் உள்ள 90 சட்டமன்ற தொகுதிகளிலும் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தீவிரமாக நடைப்பெற்றுவருகிறது. அக்டோபர் 5 ஆம் தேதி ஒரே கட்டமான ஹரியானாவில் சட்டசபை தேர்தல் நடைப்பெற்றது. இதில், பாஜக தனித்து களம் காண்கிறது. காங்கிரஸ் இந்தியா கூட்டணியில் களம் கண்டுள்ளது.

இந்தநிலையில், காலை 10.30 மணி நிலவரப்படி காங்கிரஸ் 34 , பாஜக 48, மற்றவை 8 என்ற முன்னிலை வகிக்கின்றன..

முன்னதாக, 8.30 நிலவரப்படி, காங்கிரஸ் 52 இடங்களிலும், பாஜக 16 இடங்களிலும், மற்றவை 5 இடங்கள் என காங்கிரஸ் பெரும் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வந்தது. மேலும், கருத்துக்கணிப்புகளிலும் காங்கிரஸ்தான் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றும் என்று கணிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது காங்கிரஸை பின்னுக்கு தள்ளி பாஜக முன்னிலை வகித்து வருகிறது. இதனால், காங்கிரஸ் பாஜகவிடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

ஜம்மு-காஷ்மீரில் தேசிய மாநாட்டு - காங்கிரஸ் கூட்டணி 49 இடங்களிலும், பாஜக 6 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன. அதனால், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைப்பது கிட்டதட்ட உறுதியாகியுள்ளது.