இந்தியா

மீண்டும் ஹரியானா முதலமைச்சராக பதவியேற்கிறார் மனோகர் லால் கட்டார் 

மீண்டும் ஹரியானா முதலமைச்சராக பதவியேற்கிறார் மனோகர் லால் கட்டார் 

webteam

ஹரியானா மாநிலத்தில் பாஜக மற்றும் ஜனநாயக ஜனதா கட்சியின் கூட்டணி முடிவாகியுள்ளது. 

ஹரியானா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. மொத்தம் 90 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பாஜக 40 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி 31 இடங்களிலும் வெற்றிப் பெற்றுள்ளது. ஜனநாயக ஜனதா கட்சி 10 இடங்களில் வெற்றிப் பெற்றுள்ளது. ஆட்சியமைக்க 46 இடங்கள் தேவைப்படுவதால் எந்தக் கட்சியும் தனியாக ஆட்சியமைக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதனால் ஹரியானாவில் யார் ஆட்சியமைக்க போகிறார்கள் என்ற இழுபறி நீடித்து வந்தது. 

இந்நிலையில் பாஜக மற்றும் ஜனநாயக ஜனதா தளம் கட்சிகளிடையே தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி உறுதியாகியுள்ளது. அதன்படி பாஜக ஹரியானாவில் மீண்டும் ஆட்சியமைக்க ஜனநாயக ஜனதா கட்சி ஆதரவு அளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஹரியானா மாநில முதலமைச்சராக கட்டார் மீண்டும் பதவியேற்பார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

துணை முதலமைச்சராக துஷ்யந்த் சவுதாலா பதவியேற்க உள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சண்டிகரில் நாளை ஹரியானா மாநில ஆளுநர் சந்தித்து மனோகர் லால் கட்டார் ஆட்சியமைக்க உரிமை கோருவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனநாயக ஜனதா கட்சி 10 இடங்களில் வெற்றிப்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.