கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ளதால் நவம்பர் 8 ஆம் தேதி முதல் மத்திய அரசு அலுவலங்களில் மீண்டும் பயோ மெட்ரிக் முறையில் வருகையை பதிவு செய்வது அமலுக்கு வருகிறது.
மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டுள்ள உத்தரவில், பயோமெட்ரிக் பதிவுக் கருவி அருகே கிருமி நாசினி வைக்கப்பட வேண்டும் என்றும் ஒவ்வொரு பணியாளரும் வருகை பதிவு செய்யும் முன்னரும் பின்னரும் கைகளை சுத்தம் செய்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பயோமெட்ரிக் இயந்திரத்தில் உள்ள ஸ்கேனர் பகுதியை அடிக்கடி சுத்தம் செய்யும் வகையில் ஒரு பணியாளர் நியமனம் செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.