தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏவுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் மசோதாவுக்கு மாநிலங்களவை ஒப்புதல் அளித்துள்ளது.
நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு பதவியேற்ற பின்பு தேசிய புலனாய்வு அமைப்பு சட்டத் திருத்த மசோதாவை கொண்டு வர முடிவு எடுத்தது. இதனையடுத்து, என்.ஐ.ஏவுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் இந்தச் சட்டத்திருந்த மசோதாவை கடந்த 8ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் தாக்கல் செய்தார்.
இந்த மசோதாவிற்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனையடுத்து நடந்த வாக்கெடுப்பில் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏவுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் மசோதாவுக்கு மாநிலங்களவையும் ஒப்புதல் அளித்துள்ளது. மாநிலங்களவையில் ஒப்புதல் கிடைத்ததையடுத்து, குடியரசு தலைவரின் ஒப்புதல் பெற்று விரைவில் சட்டமாக்கப்படும் எனத் தெரிகிறது.