இந்தியா

பள்ளிகளில் பகவத் கீதை கட்டாயம்: மசோதா நிறைவேற்ற முயற்சி

Rasus

பள்ளிகளில் பகவத் கீதையை கட்டாயமாக்க கோரி கொண்டுவரப்பட்டுள்ள தனிநபர் மசோதா, வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

நாடு முழுவதுமுள்ள பள்ளிகளில் பகவத் கீதை வாசிப்பதை கட்டாயமாக்க வலியுறுத்தி பாரதிய ஜனதாவைச் சேர்ந்த எம்.பி ரமேஷ் பிதுரி இந்த தனிநபர் மசோதாவை கொண்டுவந்திருக்கிறார். அந்த மசோதாவில் நாடுமுழுவதும் உள்ள பள்ளிகளில் பகவத் கீதை வாசிப்பதை கட்டாயமாக்க வேண்டும். இதை அமல்படுத்தாத பள்ளிகளின் உரிமங்களை ரத்து செய்ய வேண்டும். சிறுபான்மையினர் பள்ளிகளுக்கு இது பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படலாம் எனக் கூறப்படுகிறது.