இந்தியா

82 வயது சமூக செயற்பாட்டாளர் பில்கிஸ் தாதி டெல்லி எல்லையில் தடுத்து நிறுத்தம்

82 வயது சமூக செயற்பாட்டாளர் பில்கிஸ் தாதி டெல்லி எல்லையில் தடுத்து நிறுத்தம்

Veeramani

விவசாயிகளின் போராட்டத்தில் பங்கேற்க டெல்லி-ஹரியானா எல்லையை அடைந்த ஷாஹீன் பாகினை சேர்ந்த 82 வயது சமூக செயற்பாட்டாளர் பில்கிஸ் தாதி டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

அரசாங்கத்தின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராடும் விவசாயிகளுடன் இணைவதற்காக சிங்கு பகுதியில் உள்ள டெல்லி-ஹரியானா எல்லையை அடைந்த ஷாஹீன் பாக்  சமூக செயற்பாட்டாளர் பில்கிஸ் தாதியை டெல்லி காவல்துறையினர் கைது செய்தனர். முன்னதாக “நாங்கள் விவசாயிகளின் மகள்கள். இன்று போராட்டத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக செல்வோம். நாங்கள் குரல் எழுப்புவோம், அரசாங்கம் எங்கள் பேச்சைக் கேட்க வேண்டும், ”என்று அவர்  கூறியிருந்தார்

இந்த ஆண்டின் தொடக்கத்தில் டெல்லி ஷாஹீன் பாகில் நடந்த சிஏஏ எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் மூலமாக பில்கிஸ் தாதி உலக புகழ்பெற்ற நபராக மாறினார், மேலும் டைம் பத்திரிகையில் இந்த ஆண்டின் மிகவும் செல்வாக்கு மிக்க 100 பேர்’ பட்டியலில் பிரதமர் மோடியுடன் இந்த பில்கிஸ் தாதி பாட்டியும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.