இந்தியா

வேகமாக வந்த பைக்கை பிடித்த காவலர் : தரதரவென இழுத்துச்சென்று விழுந்த இளைஞர்கள்..!

வேகமாக வந்த பைக்கை பிடித்த காவலர் : தரதரவென இழுத்துச்சென்று விழுந்த இளைஞர்கள்..!

webteam

ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய வாலிபர்களின் பைக்கை பிடித்த காவலர் பைக்குடன் சேர்த்து தரதரவென இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் மும்பையில் நிகழ்ந்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. குறிப்பாக,
இந்தியாவிலேயே கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ள பகுதிகளில் ஒன்றான மும்பை நகரத்தில் கடுமையான ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. காவல்துறையினர் அங்கு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அந்த வகையில் மும்பையின் டோங்கிரி பகுதியில் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வேகமாக வந்த இருசக்கர வாகனம் ஒன்றை, ஜல்லிக்கட்டு காளையை பிடிப்பதுபோது போல காவலர் ஒருவர் பாய்ந்து பிடித்தார்.

ஆனால் வாகனத்தை ஓட்டி வந்த இருவரும் வண்டியை நிறுத்தாமல் காவலரை தரதரவென இழுத்துச்சென்றனர். வாகனம் சிறிது தூரம் சென்றதும் கவிழ்ந்தது. இதில் அந்தக் காவலர் காயமடைந்தார். தற்போது மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார்.