பாம்பு Google
இந்தியா

பீகார்: ”நா கடிச்சா தாங்கமாட்ட... ” தன்னை கடித்த பாம்பை திருப்பிக் கடித்த நபர்...நடந்தது என்ன?

Jayashree A

பீகார் மாநிலம் நவடா பகுதியில், நடந்துள்ள ஒரு சம்பவம் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பாம்பு கடித்து மனிதன் இறப்பதை பார்த்திருப்போம். முதன்முறையாக மனிதனை கடித்த பாம்பு இறந்ததை கேள்விபட்டு இருக்கிறீர்களா?

நவடா பகுதியில் உள்ள ராஜவுலியின் காட்டுப்பகுதியில் ரயில்வே ஊழியர்கள் சிலர் அப்பகுதியில் தண்டவாளம் அமைக்கும் பணியினை செய்து வந்துள்ளனர். அதில் ஒருவர் சந்தோஷ் லோஹர். 35 வயதான இவர் கடந்த செவ்வாய்கிழமை ஊழியர்களுடன் இரவு உணவினை முடித்துக்கொண்டு தனது இருப்பிடத்திற்கு படுக்க சென்றுவிட்டார். அச்சமயம் அவரை ஒரு விஷப்பாம்பு கடித்துள்ளது.

பொதுவாக கிராமங்களில் ஒரு நம்பிக்கையான கதை உண்டு. முள்ளை முள்ளால் எடுப்பது, வைரத்தை வைரத்தால் அறுப்பது, விஷத்தை விஷத்தால் முறிப்பது என்பதைப்போல.... பாம்பு ஒருவரை கடித்தால், கடித்தவர் அந்தப் பாம்பை திருப்பி கடிக்கவேண்டும். அப்படி கடிக்கும்போது விஷ முறிவு ஏற்படும் என்ற கதையை நம்பிய சந்தோஷ் லோஹர், தன்னை கடித்த பாம்பை, உடனடியாக பிடித்து, அதை ஆத்திரம் தீர இருமுறை கடித்துள்ளார்.

பின்னர், ஊழியர்களின் உதவியுடனும் கையில் பாம்புடனும் அருகில் உள்ள மருத்துவமனை சென்றுள்ளார். அங்கு அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில் சந்தோஷ் லோஹர் கடித்த பாம்பானது இறந்துள்ளது. அதேசமயம் சந்தோஷ் லோஹர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின் வீடு திரும்பியுள்ளார்.

பொதுவாக பாம்புகள் கடித்தால் உடனடியாக அருகில் இருக்கும் மருத்துவமனைக்குதான் செல்ல வேண்டுமே தவிர எந்தவித விபரீதமான முடிவும் எடுக்கக்கூடாது. மேற்கூரிய சம்பவத்தில், பாதிக்கப்பட்டவர் உடடினயாக மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்டதாலேயே காப்பாற்றப்பட்டிருப்பார் என மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்ற. எனவே பாம்புகள் யாரையேனும் கடித்தால் மருத்துவமனைதான் செல்ல வேண்டுமே தவிர கட்டுக்கதைகளை நம்பக்கூடாது.