காவல்நிலையத்தில் தம்பதி உயிரிழப்பு புதிய தலைமுறை
இந்தியா

பீகார் | போலீஸ் கஸ்டடியில் உயிரிழந்த கணவன் - மைனர் மனைவி; காவல்நிலையத்திற்கு தீ வைத்த உறவினர்கள்!

Jayashree A

பீகாரில் வாலிபர் ஒருவரும் அவரது மைனர் மனைவியும் போலிஸ் காவலில் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் நாடெங்கும் அதிர்ச்சி அலையை வீசியுள்ளது.

பீகார் மாநிலத்தில் அராரியா மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கு திருமணமாகி தன் மனைவியுடன் குடும்பம் நடத்திவந்த நிலையில் சமீபத்தில் அவரது மனைவி நோய்வாய்பட்டு இறந்துள்ளார்.

இந்நிலையில், மனைவி இறந்து சில நாட்கள் ஆன நிலையில் , அந்த நபர், இறந்த தனது மனைவியின் 14 வயது நிரம்பிய தங்கையை உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்திருக்கொண்டிருக்கிறார்.

பெண்களுக்கு 18 வயது பூர்த்தியானால் மட்டுமே அப்பெண் திருமணத்திற்கு தயாராகிறார் என்பதால் இந்தியதிருமணச்சட்டம் பெண்களின் திருமணவயதை 18 ஆக நிர்ணயம் செய்துள்ளது.

ஆகவே 14 வயதுடைய பெண்னை சம்பந்தபட்ட நபர் திருமணம் செய்துக்கொண்டதால், சட்டப்படி இது குழந்தைதிருமணம் ஆகும். ஆகையால் போலிசார் சம்பவிடத்திற்கு விரைந்து குழந்தை திருமணம் செய்துக்கொண்ட அந்த நபரையும், அந்த சிறுமியையும் கைது செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர்.

இந்த விசாரணையின் போதே அந்த நபரும், அச்சிறுமியும் போலிஸ் ஸ்டேஷனில் தற்கொலை செய்துக்கொண்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அக்கிராம மக்கள் போலிசாரின் தவறான அணுகுமுறையால்தான் இருவரும் தற்கொலை செய்துக்கொண்டதாக கூறி ஆத்திரமடைந்த போலிசாருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். அத்துடன் காவல் நிலையத்திற்கு தீவைத்ததுடன் அவர்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.