இந்தியா

நான்கு ஆண்டுகளாக சரிந்தது பிடெக், எம்டெக் மாணவர் சேர்க்கை

நான்கு ஆண்டுகளாக சரிந்தது பிடெக், எம்டெக் மாணவர் சேர்க்கை

webteam

கடந்த நான்கு ஆண்டுகளில் பிடெக், எம்டெக் படிப்புகளை தேர்ந்தெடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. 

இந்தியாவிலுள்ள உயர்கல்வி படிப்புகளுக்கான All India Survey on Higher Education (AISHE) என்ற அறிக்கை வெளியாகி உள்ளது. இதில் தொழிற்முறை சார்ந்த பிடெக் மற்றும் எம்டெக் படிப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கை குறைந்துள்ளது கண்டிபிடிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக கடந்த 4 ஆண்டுகளில் பிடெக், எம்டெக் படிப்புகளுக்கான  மாணவர்கள் சேர்ப்பு மிகவும் குறைந்துள்ளது. 

மேலும் முதுகலை பட்டம் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 2014-15ஆம் ஆண்டில் 2,89,311 ஆக இருந்தது. இந்த எண்ணிக்கை 2018-19ஆம் ஆண்டில் 1,35,500 ஆக குறைந்துள்ளது. அதேபோல இந்தக் கால அளவில் பிடெக் படிப்பில் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 42,54,919 லிருந்து 37,70,949ஆக குறைந்துள்ளது. அதாவது 11 சதவிகிதம் குறைந்துள்ளது. 

எனினும் எம்பிஏ, பிஎட், எல்.எல்.பி உள்ளிட்ட படிப்புகளில் மாணவர்கள் அதிகளவு சேர்ந்துள்ளனர். குறிப்பாக பிஎட் படிப்பில் மாணவர் சேர்க்கை 80 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 2014-15ஆம் ஆண்டு 6,57,194 லிருந்து 2018-19ஆம் ஆண்டு 11,75,517ஆக உயர்ந்துள்ளது. AISHE 2018-19ஆம் ஆண்டு அறிக்கையில் தற்போது இந்தியாவில் 993 பல்கலைக்கழகங்கள், 39,931கல்லூரிகள் மற்றும் 10,725 கல்வி நிறுவனங்கள் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.