இந்தியா

சமாஜ்வாதி கட்சியின் சைக்கிள் சின்னம் முடக்கப்பட வாய்ப்பு

சமாஜ்வாதி கட்சியின் சைக்கிள் சின்னம் முடக்கப்பட வாய்ப்பு

webteam

உத்தரப் பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சைக்கிள் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கி வைக்கவே அதிக வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.

உத்தரப் பிரதேச ஆளும் கட்சியான சமாஜ்வாதியின் சின்னமான சைக்கிளுக்கு அந்த மாநில முதலமைச்சர் அகிலேஷ் யாதவும், அவரது தந்தையான முலாயம் சிங்கும் உரிமை கோரியுள்ளனர். இருவரும் தங்கள் பிரிவுதான் பெரும்பான்மை கட்சி உறுப்பினர்களைக் கொண்டிருப்பதாக தேர்தல் ஆணையத்தில் முறையிட்டுள்ளனர்.

இந்நிலையில், சமாஜ்வாதி கட்சியின் சைக்கிள் சின்னம் யாருக்கு என்பது குறித்து தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்கவுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சைக்கிள் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கி வைக்கவே அதிக வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.