இந்தியா

புயல் நடுவே பிறந்த குழந்தைக்கு பெயர் ‘ஃபானி’ !

webteam

புவனேஸ்வரில் இன்று பிறந்த குழந்தைக்கு ‘ஃபானி’ என்று பெயர்சூட்டியுள்ளனர்.

அதிதீவிர புயலான ஃபானி புயல் ஒடிசா மாநிலம் புரி பகுதியில் மணிக்கு 175கி.மீ வேகத்தில் இன்று காலை கரையைக் கடந்தது. ஒவ்வொரு புயல் உருவாகி கரையைக் கடக்கும்போதும் பிறக்கும் குழந்தைகளுக்கு அந்தப் புயலின் பெயரை சூட்டுவது வாடிக்கையாகிவிட்டது. தமிழ்நாட்டில் கடந்த கஜா புயலின் போதும் பிறந்த குழந்தைக்கு அந்தப் புயலின் பெயரையே சூட்டினர்.

32 வயதான கர்ப்பிணி பெண் ஒருவருக்கு ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள ரயில்வே மருத்துவமனையில் இன்று காலை 11.03-க்கு பெண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து பிறந்த அந்தப் பெண் குழந்தைக்கு ‘ஃபானி’ என்று கடந்தபோன அந்த ஃபானி புயலின் பெயரையே சூட்டியுள்ளனர். 

தாயும் சேய் இருவரும் நலமுடன் உள்ளனர். அந்தப் பெண் குழந்தையின் தாய் ரயில்வே துறையில் பணிபுரிந்து வருகிறார். மன்சேஸ்வரில் உள்ள கோச் ரிப்பேர் வெர்க் ஷாப்பில் உதவியாளராகப் பணியாற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது. 

ஒவ்வொரு புயலின் போதும் அதன் தாக்கத்திலிருந்து மக்கள் மீண்டு வருவது போல, ஒரு பெண்ணும் பிரசவத்தின் போது மறு ஜென்மம் எடுத்து வருவதையே இந்த நிகழ்வு உணர்த்துகிறது.