இந்தியா

குழந்தை, சிறாருக்கு கோவாக்சின் மருந்து - பரிசோதனைக்கு பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு அனுமதி

குழந்தை, சிறாருக்கு கோவாக்சின் மருந்து - பரிசோதனைக்கு பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு அனுமதி

Sinekadhara

குழந்தைகளுக்கு கோவாக்சின் கொரோனா தடுப்பு மருந்து செலுத்தி சோதனை நடத்துவதற்கு, ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

பாரத் பயோடெக் நிறுவனம் ஐசிஎம்ஆருடன் இணைந்து தயாரித்துள்ள கோவாக்சின் கொரோனா தடுப்பு மருந்து, தற்போது இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு போடப்பட்டு வருகிறது. இச்சூழ்நிலையில், கோவாக்சின் தடுப்பு மருந்தை 2 வயது முதல் 18 வயதுடைய சிறார்களுக்கு செலுத்தி சோதனை நடத்துவதற்கு பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு மத்திய அரசின் மருத்துவ நிபுணர் குழு அனுமதி அளித்துள்ளது. டெல்லி, புனே, பாட்னா உள்ளிட்ட நகரங்களில் சுமார் 500 இடங்களில், சோதனை நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.