இந்தியா

சாதி ரீதியிலான கணக்கெடுப்பு கோரி இன்று முழு அடைப்பு போராட்டம்

சாதி ரீதியிலான கணக்கெடுப்பு கோரி இன்று முழு அடைப்பு போராட்டம்

ஜா. ஜாக்சன் சிங்

இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு சாதி ரீதியிலான கணக்கெடுப்பு நடத்தக் கோரி இன்று நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. 

இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு சாதிய ரீதியிலான கணக்கெடுப்பை நாடு தழுவிய அளவில் நடத்த வேண்டும் என பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் சமூகங்களின் பணியாளர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தி வந்தது.

ஆனால், இந்தக் கோரிக்கையை மத்திய அரசுக்கு ஏற்காததால் இன்று நாடு தழுவிய முழு அடைப்புப் போராட்டதிற்கு இந்த அமைப்பு அழைப்பு விடுத்திருந்தது இவை தவிர, தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்தக்கூடாது;, தனியார் துறைகளிலும் எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினருக்கான இட ஒதுக்கீடு முறையை கொண்டு வர வேண்டும்; விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெறுகிறது.

இந்த முழுஅடைப்பு போராட்டத்திற்கு பாரத் முக்தி மோர்ச்சா பகுஜன் முக்தி மோர்ச்சா உள்ளிட்ட பல அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால், பெரும்பாலான அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவிக்காததால் இந்த முழு அடைப்பு போராட்டம் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தெரியவில்லை.