ஷைஸ்வரி எக்ஸ் தளம்
இந்தியா

என்னது தூங்குறதுக்கு லட்சம் லட்சமா பரிசா! ஸ்லீப் சாம்பியன் போட்டியில் 9 லட்சம் வென்ற பெங்களூரு பெண்!

Prakash J

ஒரு மனிதர் புத்துணர்வு பெறுவதற்கும், அவரது உடல் சரியாக இயங்குவதற்கும் தூக்கம் என்பது அவசியமாகும். அதனால்தான் ஒவ்வொருவருக்கும் தூக்கம் ஆரோக்கியத்துக்கான அஸ்திவாரமாகப் பார்க்கப்படுகிறது. ஆகையால், எல்லா மனிதர்களும் அயர்ந்து தூங்கி எழுந்தாலே, உடல் புத்துணர்ச்சி பெற்றுவிடும். இதையடுத்துத்தான், ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ்வதற்கு சராசரியாக 6 முதல் 8 மணி நேர தூக்கம் வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

அப்படியான நல்ல தூக்கத்திற்கும் லட்சக்கணக்கில் பரிசு கிடைத்துள்ளது என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஆம், பெங்களூருவைச் சேர்ந்த முதலீட்டு வங்கியாளரான ஷைஸ்வரி, இந்த வருட ஸ்லீப் சாம்பியன் திட்டத்தின் மூலம் ரூ.9 லட்சம் பரிசுத் தொகை பெற்றுள்ளார்.

இதையும் படிக்க: ”அஜய் ஜடேஜா எங்களுக்காக அழுதார்” - ஆப்கானிஸ்தான் வீரர் பகிர்ந்த நெகிழ்ச்சி சம்பவம்!

தூக்கத்தின் முக்கியத்துவத்தை விளக்கும் வகையிலும், எத்தகைய மன அழுத்தத்திலும் ஒருவர் எப்படி நன்றாகத் தூங்க முடியும் என்பதை அறியும் நோக்கத்திலும் பெங்களூருவைத் தளமாகக் கொண்ட ஸ்டார்ட்-அப் வேக்ஃபிட்டின் ஸ்லீப் இன்டர்ன்ஷிப் திட்டத்தின் மூன்றாவது சீசன் சமீபத்தில் நடைபெற்று முடிந்தது.

இந்த திட்டத்தில் ஒவ்வொரு நபரும் ஒவ்வொரு இரவும் 8 முதல் 9 மணி நேரம் வரை முழுமையாகத் தூங்க வேண்டும். மேலும், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் பகலில் 20 நிமிடம் நன்றாக தூங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இதன்மூலம் அவர்களின் தூக்கம் கண்காணிக்கப்பட்டது.

தூக்குறதுக்கு சம்பளம் என்றால் சும்மா இருப்பார்கள். போட்டியாளர்கள் குவிந்துள்ளனர். சுமார் 5 லட்சம் பேர் போட்டியில் கலந்து கொள்ள முன் வந்துள்ளனர். அந்த வகையில் இறுதிக் கட்டம் வரை வந்த 12 போட்டியாளர்களில் ஷைஸ்வரியும் ஒருவர். இவர்தான், எல்லாப் பிரிவுகளிலும் இந்த வருடத்தின் ‘ஸ்லீப் சாம்பியனாக’ வெற்றி பெற்றதுடன், ரூ.9 லட்சம் பரிசுத் தொகையையும் வென்றுள்ளார்.

இதில் வெற்றிபெற்றது குறித்து ஷைஸ்வரி, ”நல்ல தூக்கத்தைப் பெறுவதற்கு ஒழுக்கம் தேவை. உடல், தன்னைத்தானே சீர்படுத்த தூக்கம் மிகவும் அவசியம். அத்தகைய போட்டிகளில் நீங்கள் வெற்றிபெற விரும்பினால், நீங்கள் வழக்கமான தூக்க நேரத்தை உருவாக்க வேண்டும். இரவில் மொபைல் மற்றும் டிவி பார்ப்பதை குறைக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: டெஸ்ட் தரவரிசை| சரிவைச் சந்தித்த ரோகித், கோலி.. முன்னேறிய ரிஷப்.. முதலிடத்தில் நீடிக்கும் அஸ்வின்!