இந்தியா

ஜில்லென்ற வானிலை! மலை வாசஸ்தலங்களை விட குளுகுளு சூழலில் பெங்களூரு நகரம்!

ஜில்லென்ற வானிலை! மலை வாசஸ்தலங்களை விட குளுகுளு சூழலில் பெங்களூரு நகரம்!

ச. முத்துகிருஷ்ணன்

23 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில், பெங்களூரு தற்போது இந்தியாவில் உள்ள பல மலை வாசஸ்தலங்களை விட குளிர்ச்சியான நகரமாக உள்ளது.

நேற்று பெங்களூரு 10 ஆண்டுகளில் மே மாதத்தில் மிகக் குளிரான நாளைக் கண்டது. அதிகபட்ச வெப்பநிலை 24.3ºC ஆக இருந்தது. வெள்ளிக்கிழமை இன்னும் குளிர் அதிகமாக இருந்தது. வெள்ளிக்கிழமையன்று, காலை 8.30 மணிக்கு அதிகபட்ச வெப்பநிலை 23ºC ஆக பதிவானதால், மே மாதத்தில் காணப்பட்ட மிகக் குறைந்த அதிகபட்ச வெப்பநிலைக்கான தனது சொந்த சாதனையை பெங்களூரு முறியடித்தது.

வானிலை பதிவர்களின் கூற்றுப்படி, மகாபலேஷ்வர் மற்றும் சிம்லா உட்பட இந்தியாவின் பல மலைப்பகுதிகளை விட பெங்களூரு குளிர்ச்சியாக இருந்தது. இந்திய வானிலை மையத்தின் கூற்றுப்படி, இது மே மாதத்தில் காணப்பட்ட சாதாரண வெப்பநிலையில் இருந்து சுமார் 8-10 டிகிரி குறைவான வெப்பநிலை ஆகும். நகர்ப்புறம் தவிர பெங்களூரு விமான நிலையப் பகுதியில் 26.4ºC, மற்றும் பெங்களூரு HAL விமான நிலையப் பகுதியில் 23.8ºC பதிவாகியுள்ளது. இந்த திடீர் வெப்பநிலை சரிவுக்கு அசானி சூறாவளி காரணமாக பெய்த மழையே காரணம் என கூறப்படுகிறது.

பெங்களூரில் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்று இந்திய வானிலை மையம் கணித்திருப்பதால், அடுத்த இரண்டு நாட்களுக்கு குளிர்ந்த வானிலை தொடரும். சில நேரங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், சில நேரங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது. அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை முறையே 24ºC மற்றும் 20ºC ஆக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.