இளைஞர் PT
இந்தியா

"நான் இந்தியன்.. என்னிடம் ஆவணங்கள் இல்லை; என் குடியுரிமை ரத்தாகுமா?" - பயத்தில் இளைஞர் விபரீத முடிவு

முறையான ஆவணங்கள் ஏதும் இல்லாததால் இந்திய குடியுரிமைக்கு பறிக்கப்படுமோ என்ற பயத்தில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Jayashree A

முறையான ஆவணங்கள் ஏதும் இல்லாததால் இந்திய குடியுரிமைக்கு பயந்து இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

சிஏஏ அமலுக்கு வந்ததில் இருந்து, தன்னிடம் முறைப்படி ஆவணங்கள் ஏதும் இல்லாததால் குடியுரிமையை இழந்துவிட்டதாக நினைத்து பீதியில் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கொல்கத்தாவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கு பாஜக தான் காரணம் என்று திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது.

caa, sc

நடந்தது என்ன?

கொல்கத்தா நேதாஜி நகரில் வசித்து வந்தவர் தேபாசிஸ் சென்குப்தா (37). இவர் மார்ச் 19 ஆம் தேதி சுபாஸ்கிராமில் உள்ள தனது மாமாவின் வீட்டிற்குச் சென்றவர், அதன் பிறகு திரும்பி வரவில்லை.

இந்நிலையில், அவரது தந்தை தபாஸ் சென்குப்தா, தனது மகன் தெபாஸிஸ் அவரது மாமாவின் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறியிருக்கிறார்.

மகனின் தற்கொலை குறித்து, தபாஸ் குப்தா காவல்துறையிடம் புகார் அளித்தபோது, ”சிஏஏ சட்டம் அமலுக்கு வந்ததால், என் மகன் இந்தியர் என்ற ஆதாரத்தை காட்ட, மத்திய அரசு கேட்கும் ஆவணங்கள் ஏதும் என் மகனிடம் போதியளவு இல்லாததால் எனது மகன் மிகுந்த மன அதிர்ச்சியில் இருந்து வந்தார். வேதனை மற்றும் கடுமையான பய மனநோயாலும் அவதிப்பட்டு வந்தார். இதுபோன்ற கொடூரமான சட்டத்தை அமல்படுத்துவதால் எழும் அச்சத்தின் காரணமாக, எதிர்காலத்தில் இதுபோன்ற துரதிர்ஷ்டவசமான சம்பவம் நடக்காமல் தடுக்கவேண்டும். அதனால், இந்த விஷயத்தை மிக அவசரமாக விசாரிக்க வேண்டும்” என்று அவர் காவல்துறையை வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், “மோடி அரசாங்கத்தின் பேரழிவுகரமான முடிவின் பேரழிவு விளைவுகள்!” என்று திரிணாமுல் காங்கிரஸ் விமர்சித்துள்ளது.