இந்தியா

மேற்கு வங்கத்தில் களைகட்டிய மாம்பழத் திருவிழா

webteam


மேற்குவங்க மாநிலத்தில் தொடங்கியுள்ள மூன்று நாள் மாம்பழத் திருவிழாவில், 300 வகையான மாம்பழங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன.

மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் கடந்த 8ஆம் தேதி மாம்பழத் திருவிழா தொடங்கியது. மூன்று நாட்கள் திட்டமிடப்பட்டுள்ள இந்த திருவிழாவுக்காக அண்டை நாடுகளான வங்கதேசம், நேபாளம் மற்றும் மேற்குவங்கத்தில் விளைந்த மாம்பழங்கள் கொண்டு வரப்பட்டன. இதில் பங்கேற்க பார்வையாளர்களுக்கு கட்டணம் ஏதும் வசூலிக்கப்படவில்லை. மேற்கு வங்க மாநிலத்தில் சுற்றுலாவை அதிகரிக்கும் வகையில் இந்த திருவிழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். இந்தத் திருவிழாவில் திரளான மக்கள் பங்கேற்று பல்வேறு வகையான மாம்பழங்களை ருசி பார்த்தனர். பல்வேறு வகையான மாம்பழங்கள் குறித்தும் இந்த திருவிழாவில் பொதுமக்கள் அறிந்துக்கொண்டனர்.