இந்தியா

விமானம் தரையிறங்குவதை இருமுறை தாமதப்படுத்தியது ஏன் ? வெளியான தகவல்!

jagadeesh

கேரள மாநிலம் கோழிக்கோடில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளாவதற்கு முன்பு இருமுறை தரையிறங்குதலை ஏன் விமானி தாமதப்படுத்தினார் என்ற விவரம் வெளியாகி இருக்கிறது.

துபாயிலிருந்து கேரளா வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கோழிக்கோட்டில் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளாகி இரண்டாக உடைந்தது. இதில் ஒரு குழந்தை, விமானிகள் உட்பட 17 உயிரிழந்தனர். மேலும் 123 பேர் காயமடைந்துள்ளதாகவும் 15 பேர் கவலைக்கிடமாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. முதற்கட்ட தகவல் அறிக்கையில் விமானத்தின் முன்சக்கரத்தில் பழுது ஏற்பட்டதால் விமானம் விபத்துக்குள்ளானதாக கூறப்பட்டுள்ளது.

இது குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்துள்ள விமானப் போக்குவரத்து இயக்குநரக விசாரணை அதிகாரி ஒருவர் "கோழிக்கோட்டில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வந்த நிலையில், விமானம் முதலில் ஓடுதளத்தின் 10-ல் தரையிறங்க முயன்றுள்ளது. ஆனால், அதில் தரையிறங்காமல் இரண்டாவது முறையாக ஓடுதளத்தின் 28 இல் தரையிறங்க முயற்சித்துள்ளது. அதன் பின்னர் மூன்றாவது முறை மீண்டும் ஓடுதளத்தின் 10-ல் தரையிறங்கும் போது தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது" என்றார்.

மேலும் "விமானத்தில் 190 பயணிகள் இருந்தார்கள். விமானிகளால் 2000 மீட்டர் தூரத்தைதான் பார்க்க முடியும். கடுமயைான வானிலை என ரேடார் உணர்த்தியது. கடுமையான காற்றின் வேகமாக இரண்டு முறை தரையிறங்க முயற்சித்து யூடர்ன் அடித்து வந்தார்கள் விமானிகள். ஆனாலும் அவர்களால் ரன்வே 28 க்கு விமானத்தை தரையிறக்க முடியவில்லை. அதனால் 10 ஆவது ரன்வேயில் முழு வேகத்துடன் விமானம் தரையிறங்கியது. விமானம் நிற்காமல் சென்று பளத்தாக்கில் மோதி இரண்டாக உடைந்து விழுந்தது" என அிதகாரி தெரிவித்துள்ளார்.