சந்திரபாபு நாயுடு கோப்புப் படம்
இந்தியா

சந்திரபாபு நாயுடு சொன்ன ஒற்றை வார்த்தை.. கிடுகிடுவென உயர்ந்த பங்குச்சந்தை!

Jayashree A

மக்களவை தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, அன்றைய நாள் (ஜூன் 4) முழுவதும் பங்குச் சந்தையானது சரிவை சந்தித்தது. இந்நிலையில், அதற்கு அடுத்த நாளான நேற்று (ஜூன் 5) தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு தனது கட்சியின் ஆதரவை, பாஜகவுக்கு தெரிவித்தார். இதையடுத்து நேற்று இந்திய பங்குச் சந்தை கிடுகிடுவென உயர்ந்தது.

முன்னதாக நேற்று லோக்சபா தேர்தல் முடிவுகளில் எதிர்பார்த்த இடத்தை பெறாத நிலையில் தனிப்பெரும்பான்மையில் ஆட்சி அமைக்கமுடியாமல் பாஜக திணறிய சமயம், “நாங்கள் இருக்கிறோம் நீங்கள் ஆட்சியமைக்க” என்று N.D.A கூட்டணியில் உள்ள சந்திரபாபு நாயுடுவும், ஜேடியு தலைவருமான நிதிஷ்குமாரும் ஆதரவு கொடுத்தனர். இதையடுத்து, மீண்டும் மத்தியில் பாஜக ஆட்சி அமைக்க இருக்கிறது.

NDA கூட்டணி

முன்னதாக தெலுங்கு தேச கட்சியின் தலைவரான சந்திரபாபு நாயுடுவிடம் நேற்று பத்திரிகையாளர்கள் கூட்டணி குறித்து கேள்வி எழுப்பினர். அப்போது பேசிய அவர், “நான் அனுபவம் வாய்ந்த நபர். இந்த நாட்டில் பல அரசியல் மாற்றங்களை கண்டிருக்கிறேன். நாங்கள் N.D.A வில்தான் இருக்கிறோம், நான் N.D.A நடத்தும் ஆலோசனை கூட்டத்திற்கு செல்கிறேன்” என்று கூறிவிட்டு சென்றார்.

இவரின் ஒரு வார்த்தையைத் தொடர்ந்து, நிஃப்டி 50 குறியீட்டு எண் 22,445 புள்ளிகள் உச்சத்தைத் தொட்டது. இது 2 சதவீதத்திற்கு மேல் உயர்ந்தது. பிஎஸ்இ சென்செக்ஸ் 73,851 புள்ளிகளை எட்டியது மற்றும் செவ்வாய்க்கிழமை முடிவிற்கு எதிராக 1.90 சதவீதம் உயர்ந்தது.

இன்றும் பங்கு சந்தை ஏற்றத்துடனே வர்த்தகமாகி வருகிறது. அதன்படி இன்று நிப்டி 22798.60 ஆரம்பித்த வர்த்தகமானது, 150 புள்ளிகள் அதிகரித்து தொடர்ந்து வர்த்தகமானது நடைபெற்று வருகிறது. அதே போல் மும்பை வர்தகசந்தையான சென்செஸ் 75078.70 புள்ளிகளில் ஆரம்பித்த வர்த்தகமானது 500 புள்ளிகள் அதிகரித்து வர்த்தகம் நடைபெற்று வருகிறது.