இந்தியா

"QR கோட் ஸ்கேன் விவகாரத்தில் கவனத்துடன் இருங்கள்!”-வாடிக்கையாளர்களை அலார்ட் செய்த எஸ்பிஐ

EllusamyKarthik

"QR கோட் ஸ்கேன் விவகாரத்தில் கவனத்துடன் இருங்கள்!” - வாடிக்கையாளர்களை அலார்ட் செய்த எஸ்.பி.ஐ

இந்தியாவில் ஆன்லைன் மூலம் பண பரிவர்த்தனை மேற்கொள்வது அண்மைய காலமாக அதிகரித்து வருகிறது. இதில் பயனர்களை காசுக்காக தில்லாலங்கடி செய்யும் தில்லு முல்லு நபர்களும் வலை விரிப்பது உண்டு. அதன் மூலம் பணத்தை மோசடி செய்வதும் உண்டு. இந்நிலையில் வாடிக்கையாளர்களை அலார்ட் செய்துள்ளது பாரத ஸ்டேட் வங்கி. 

“பணத்தை பெற ஒருபோதும் நீங்கள் QR கோடை ஸ்கேன் செய்ய வேண்டியதில்லை. அப்படி யாரேனும் பணத்தை அனுப்புவதாக சொல்லி அவர்கள் அனுப்பிய QR கோடை ஸ்கேன் செய்ய சொன்னால் அதை செய்ய வேண்டாம். அப்படி நீங்கள் அந்த QR கோடை ஸ்கேன் செய்தால் நீங்கள் உங்களது கணக்கிலிருந்து பணத்தை இழக்க வேண்டி இருக்கும். பணத்தை அனுப்ப தான் QR கோட் தேவை. பணத்தை பெறுவதற்கு தேவை இல்லை” என அந்த வங்கி தெரிவித்துள்ளது. 

இந்தியாவில் பல்வேறு ஆன்லைன் இன்ஸ்டன்ட் டிஜிட்டல் பேமெண்ட் செயலிகள் செயலில் உள்ளன. அதனை பயன்படுத்தி கோடான கோடி மக்கள் தங்களது நிதி பரிமாற்றத்தை மேற்கொள்கின்றனர்.