துரத்திய நாய்களுக்கு பயந்து ஒளிந்தவரை, திருடன் என நினைத்து எரித்து கொன்ற அதிர்ச்சி சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் பாராபங்கி நகரின் தேவா பகுதியில் உள்ள திண்டோலி தவ்கி மதி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் சுஜித் குமார் (26). பட்டிலினத்தைச் சேர்ந்தவரான இவர், ரகுபுரா கிராமத்தில் உள்ள தனது மாமியார் வீட்டுக்குச் நடந்து சென் றுள்ளார். அப்போது அவரை தெரு நாய்கள் சில துரத்தின. பயந்து போன அவர், அருகில் இருந்த வீட்டுக்குள் சென்று, ஒளிந் தார்.
அந்த வீட்டில் இருந்தவர்கள் அவரை, திருடன் என நினைத்து, கூச்சல் போட்டனர். ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் விசாரித்துள் ளனர். தான் திருடன் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார். அதை நம்பாத அவர்கள் சுஜித் குமாரை சரமாரியாகத் தாக்கி யுள்ளனர். பின் தீ வைத்து எரித்தனர். இதுபற்றி சிலர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த அவர்கள் படுகாய மடைந்திருந்த சுஜித்தை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்தச் சம்பவம் கடந்த 19 ஆம் தேதி நடந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இதுபற்றி வழக்கு பதிவு செய்த போலீசார், 5 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.