இந்தியா

லாக்கரில் வைக்கும் பொருட்களுக்கு வங்கிகள் பொறுப்பாகாது

லாக்கரில் வைக்கும் பொருட்களுக்கு வங்கிகள் பொறுப்பாகாது

webteam

லாக்கரில் வாடிக்கையாளர் வைக்கும் பொருட்கள் திருட்டுப்போனால் வங்கிகள் பொறுப்பாகாது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 

பொதுத்துறை வங்கி லாக்கரில் வைக்கப்படும் தங்க நகைகள் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள் பாதுகாப்பாக இருக்குமா என்று தகவல் அறியும் சட்டத்தின் கீழ் வழக்கறிஞர் குஷ் கல்ரா கேள்வி எழுப்பினார். அதற்கு லாக்கரில் வைக்கும் பொருட்கள் திருட்டு, கொள்ளை உள்ளிட்டவைகளால் இழப்போ, சேதமோ ஏற்பட்டால் வாடிக்கையாளர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று பா‌ரத ஸ்டே‌ட் வங்கி உள்ளிட்ட 19 பொதுத்துறை வங்கிகள் கூறியுள்ளதாகத் தெரியவந்துள்ளது. எனவே வாடிக்கையாளர்‌கள் லாக்கரில் வைக்கும் பொருட்களுக்கு வங்கிகள் பொறுப்பாகாது என்பதையே இது சுட்டிக்காட்டுகிறது என வழக்கறிஞர் குஷ் கல்ரா தெரிவித்துள்ளார்.