வங்கதேச எம்பி அன்வருள் ஆசிம் முகநூல்
இந்தியா

இந்தியாவில் வங்கதேச எம்.பி கொடூரக் கொலை! துண்டு துண்டாக வெட்டப்பட்ட உடல்கள்! பின்னணியில் HoneyTrap!

வங்கதேச எம்பி அன்வருள் ஆசிம் அன்வர் காணவில்லை என்று கூறப்பட்டநிலையில்,குடியிருப்பில் ஒன்றில் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

வங்கதேச எம்பி அன்வருள் ஆசிம் அன்வர் காணவில்லை என்று கூறப்பட்டநிலையில்,குடியிருப்பில் ஒன்றில் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அண்டை நாடான வங்கதேசத்தை சேர்ந்தவரும், அவாமி லீக் என்ற கட்சியின் எம்பியுமான அன்வருள் ஆசிம் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக கடந்த 12 ஆம் தேதி கொல்கத்தாவிற்கு வந்துள்ளார். இந்நிலையில், ஆரம்பத்தில் நண்பர் ஒருவர் வீட்டில் வசித்து வந்தநிலையில்,பிறகு வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த மே17 ஆம் தேதியில் முதல் அவரை காணவில்லை என்று காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதனைதொடர்ந்து, அன்வருள் ஆசிம்மை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டனர். அப்போதுதான் அவர் காணாமல் போக வில்லை கொல்கத்தாவில் நியூ டவுனில் உள்ள சஞ்சீவா கார்டனின் அடுக்குமாடி குடியிருப்பில் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று தெரியவந்துள்ளது. தொடர்ந்து குற்றம் நடந்த இடத்தில் மிக மோசமான கொலைக்கான பல பொருட்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளனதாக கூறப்படுகிறது. அதன்படி, 600 கிராம் பிளாஸ்டிக் பைகள், டாய்லெட் பேப்பர் ரோல்கள், ஈரமான மற்றும் உலர்ந்த டிஷ்யூ, கையுறைகள், வங்காளதேசப் பெண்ணின் பெயர் கொண்ட போர்டிங் பாஸ் மற்றும் சீப்பு, முடி போன்றவை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து போலீஸ் நடத்திய விசாரணையில் ஜிகத் ஹவ்லதார் என்பவருக்கு இவரின் மரணத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்தநிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரை விசாரித்தபோதுதான் அன்வருள் இறப்பு குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

அதன்படி, அமெரிக்க குடியுரிமை பெற்றவரும், எம்,பி அன்வருளின் நண்பருமான அக்தருஸ்ஸாமான் என்பவர் தான் அன்வருள் எம்பியை கொலை செய்வதற்காக ஆட்களை நியமித்து, இந்த கொலைக்காக மொத்தம் ரூ. 5 கோடி ரூபாய் செலவு செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

இதன்படி, ஜிகத் மற்றும் நான்கு நண்பர்களுடன் சேர்ந்து சம்பந்ததினத்தன்று, இவரின் கழுத்தை அறுத்து, கொலை செய்துள்ளனர். பிறகு அவரின் உடலின் தோலை உரித்து, பின்னர் உடலை துண்டுத்துண்டாக வெட்டி பல பாலீத்தீன் பைகளில் அடைத்துள்ளனர். அதை பல பகுதிகளில் வீசியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் ,அங்கு இருந்த பிரிட்ஜிலும் சில உடல் பாகங்களை வைத்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், அதை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அனுப்பிவைத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஜிஹாத் ஹல்வதார் யார்?

கைது செய்யப்பட்ட ஜிஹாத் ஹல்வதார் என்பவர் வங்கதேசத்தை சேர்ந்தவர் என்பதும், இவரை சட்ட விரோதமாக பல ஆண்டுகள் மும்பையில் வசித்து வந்ததும் தெரியவந்துள்ளது. இவர், கொலை செய்வதற்காக கொல்கத்தாவுக்கு அக்தருஸ்ஸாமான் என்பவரால் வரவழைக்கப்பட்டுள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.

ஷிலாந்தி ரகுமான் யார்?

மேலும், இந்த கொலையில் ஒரு பெண்ணுக்கும் தொடர்பு இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. அவர்ப் பெயர் ஷிலாந்தி ரகுமான்.

ஷிலாந்தி ரகுமான் என்ற பெண், இந்த கொலை வழக்கில் முக்கிய மூளையாக செயப்பட்ட அக்தருஸ்ஸாமான் என்பவரின் காதலி. இவரை வைத்துதான் அன்வருளை காதல் வலையில் விழவைத்து, கொல்காவிற்கு அழைத்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தற்போது இவ்வழக்கு தொடர்பாக 3 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், எம்பியின் உடலை தேடும் பணிகளும் தீவிரமாக நடைப்பெற்றுவருகிறது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.