இந்தியா

பாலியல் புகாரில் நித்தியானந்தாவை உடனே கைது செய்யுங்கள் - நீதிமன்றம் உத்தரவு

பாலியல் புகாரில் நித்தியானந்தாவை உடனே கைது செய்யுங்கள் - நீதிமன்றம் உத்தரவு

webteam

பெங்களூருவிலுள்ள பிடதி ஆசிரமத்தில் எழுந்த பாலியல் புகார் வழக்கில் நித்யானந்தாவை உடனடியாக கைது செய்ய பெங்களூரு ராம்நகர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நித்யானந்தாவின் கார் ஓட்டுநராக இருந்த லெனின் கருப்பன், பிடதி ஆசிரமத்தில் பாலியல் குற்றங்கள் நடைபெறுவதாகக் கூறி 2013ஆம் ஆண்டு புகார் அளித்தார். இந்த வழக்கில் பெங்களூரு ராம்நகர் நீதிமன்றம் நித்யானந்தாவுக்கு ஜாமீன் வழங்கியுள்ளது. இந்த நிலையில், நித்யானந்தா விசாரணைக்கு உரிய ஒத்துழைப்பு வழங்கவில்லை என லெனின் கருப்பன் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

அதில், பாஸ்போர்ட் காலாவதியான பிறகும், போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாடுகளுக்கு சென்று வருவதால் நித்யானந்தாவின் ஜாமீனை ரத்து செய்ய லெனின் கருப்பன் கோரிக்கை விடுத்திருந்தார். அதனை ஏற்ற கர்நாடக உயர்நீதிமன்றம் நித்யானந்தாவின் ஜாமீனை ரத்து செய்தது. அந்த உத்தரவு நகலை கர்நாடகா சிபிசிஐடி காவல்துறையினர் ராம்நகர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். இதனையடுத்து, நித்யானந்தாவை உடனே கைது செய்ய பெங்களூரு ராம்நகர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.

முன்னதாக, நித்தியனந்தா எங்கேயிருக்கிறார் ? என்பது தெரியாமல், அவரை கர்நாடக காவல்துறை தேடி வருகின்றது. இதுதொடர்பாக சர்வதேச போலீசாரின் உதவியையும் கர்நாடக போலீசார் நாடியுள்ளனர். அவர் தனித்தீவில் இருக்கிறார், ஓடும் கப்பலில் இருக்கிறார் என்ற பல்வேறு சர்ச்சைகள் இருந்து வருகின்றன. ஆனாலும் அவரது வீடியோக்கள் அவ்வப்போது யூடியூப் சேனலில் ஒளிபரப்பப்படுகிறது.