இந்தியா

குரங்கணி காட்டுத்தீ விபத்து எதிரொலி: கேரளாவில் ட்ரெக்கிங்க்க்கு தடை

குரங்கணி காட்டுத்தீ விபத்து எதிரொலி: கேரளாவில் ட்ரெக்கிங்க்க்கு தடை

rajakannan

தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி வனப்பகுதியில் திருப்பூர் மற்றும் சென்னையை சேர்ந்த இரண்டு குழுவினர் மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டனர். 39 பேர் கொண்ட குழுவில் 3 பேர் நீங்கலாக 36 வனப்பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது திடீரென ஏற்பட்ட காட்டுத்தீயில் மலையேற்றம் சென்ற 30-க்கும் மேற்பட்டோர் சிக்கினர். காட்டுத் தீ விபத்தில் சிக்கி இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 10-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்நிலையில், குரங்கணி காட்டுத்தீ விபத்து எதிரொலியாக கேரளாவில் உள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் மலையேறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், வனப்பகுதிகளில் சுற்றுலா செல்லவும் தாற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக கேரள தலைமை செயலாளர் தெரிவித்துள்ளார்.