இந்தியா

கர்நாடகாவில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை - ஜன., 2. வரை இரவு ஊரடங்கு

கர்நாடகாவில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை - ஜன., 2. வரை இரவு ஊரடங்கு

webteam

தமிழகத்தை தொடர்ந்து கர்நாடகாவிலும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதித்து அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார்.

இன்று முதல் ஜனவரி 2ஆம் தேதிவரை கர்நாடகாவில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

முன்னதாக தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. “அனைத்து கடற்கரைகளிலும், சாலைகளிலும் 2021 புத்தாண்டு கொண்டாட அனுமதி இல்லை. டிசம்பர் 31 நள்ளிரவு மற்றும் ஜன 1ஆம் தேதி பொதுமக்கள் கடற்கரையில் அனுமதிக்கப்பட மாட்டார்கள். தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகளில் உணவகம் மட்டும் வழக்கம்போல் செயல்படும். புத்தாண்டு கொண்டாட்டங்களில் அதிக அளவில் மக்கள் பங்கேற்க வாய்ப்புள்ளதால் கொரோனா அதிகரிக்கக்கூடும் என கருதி கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது” என தமிழக அரசு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே, புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், புத்தாண்டு  கொண்டாட்டத்திற்கு அனுமதி அளிக்கும் முதல்வர் நாராணயசாமியின் முடிவுக்கு அம்மாநில் துணை நிலை ஆளுநர் கிரென் பேடி எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.