இந்தியா

வேட்டைக்காரர்களால் கொல்லப்பட்ட தாய் காண்டாமிருகம் - குட்டியின் பாசப் போர்

Rasus

வேட்டைக்காரர்களால் கொல்லப்பட்ட தாய் காண்டாமிருக்கத்தின் அருகில் நின்றுக்கொண்டு அதன் குட்டி, தாயை எழுப்ப முயலும் வீடியோ ஒன்று பலரால் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

தந்தங்களுக்காக யானைகளும், கொம்புகளுக்காக காண்டாமிருகமும் வேட்டைக்காரர்களால் கொல்லப்படுவது தொடர்கதையாகி வருகிறது. அப்படி கொம்புக்காக வேட்டைக்காரர்களால் ஒரு காண்டாமிருகம் கொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் தாய் காண்டாமிருகம் இறந்து கிடப்பதை அறியாத குட்டி காண்டாமிருகம் அதனை முட்டி முட்டி எழுப்ப முயலுகிறது. தாய் காண்டாமிருகத்தை சுற்றிச்சுற்றி வரும் குட்டி, ஒரு கட்டத்தில் தாய் இறந்துகிடப்பதை கூட அறியாமல் பால் குடிக்க முயற்சி செய்கிறது.

கடைசி வரை விடாமல் இறந்து கிடக்கும் தாய் காண்டாமிருகத்தின் அருகிலேயே அந்தக் குட்டி நின்று போராடுகிறது. தென்ஆப்ரிக்காவில் இந்தச் சம்பவம் நடைபெற்ற நிலையில் சமீபத்தில் இந்திய வனத்துறை அதிகாரியான பிரவீன் காஸ்வான் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இதனைப் பதிவிட்டார். அதனைத் தொடர்ந்து பலரும் தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் இந்த வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர்.

இயற்கையும், இந்தப் பூமியும் மனிதருக்கு மட்டுமில்லாமல் அனைவருக்குமானது. எனவே வனவிலங்குகளை துன்புறுத்தாமல் அதனை வாழ்விடங்களிலேயே வாழ விட வேண்டும் என்பதே அனைவரின் கருத்துமாக உள்ளது.