தான் வெள்ளையாக இருந்திருந்தால் யோகா துறையில் தன்னுடைய பங்களிப்புக்காக நோபல் பரிசு வழங்கப்பட்டிருக்கும் என்று பிரபல யோகா குரு பாபா ராம்தேவ் பேசியுள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடந்த ஒரு யோகா நிகழ்ச்சியில் பாபா ராம்தேவ் பேசும்போது, ”நான் வெள்ளையான மனிதராக இருந்திருந்தால்,யோகா துறையில் நான் செய்த சேவைகளுக்காக எனக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டிருக்கும். ஆனால், நான் கருப்பாக தோற்றமளிப்பதால் நோபல் பரிசு எனக்கு மறுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், தான் யோகா மூலம் புற்றுநோய் போன்ற நோய்களைக் குணப்படுத்தியுள்ளதாகவும், இதுபோன்ற ஆயிரக்கணக்கான எடுத்துக்காட்டுகள் இருப்பதாகவும் ராம்தேவ் கூறினார். இருப்பினும், தான் எந்தவொரு பரிசையும் விரும்பவில்லை என்று பாபா ராம்தேவ் தெளிவுபடுத்தினார்.