இந்தியா

சீன பொருட்களை புறக்கணிக்க பாபா ராம்தேவ் வேண்டுகோள்

webteam

நாட்டு மக்கள் அனைவரும் சீனப் பொருள்களை தவிர்க்க வேண்டும் என யோகா குரு பாபா ராம்தேவ் வேண்டுகோள் விடுத்துள்ளார். செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

அவர் மேலும் கூறும்போது, பாகிஸ்தான் பயங்கரவாதிகளை சீனா வெளிப்படையாக ஆதரித்துவருகிறது. பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும். முதலில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவோடு இணைக்க வேண்டும். இரண்டாவதாக ஒவ்வொரு இந்தியரும் சீன உற்பத்தி பொருட்களை புறக்கணிக்க வேண்டும். செல்போன், கார்கள், வாட்ச், பொம்மைகள் ஆகிய அனைத்துப் பொருட்களையும் புறக்கணிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் அரசியல் கட்சிகள் கருத்து வேறுபாடுகளை மறந்து ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இந்தியா, சீனா இடையேயான பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், நாடுமுழுவதும் உள்ள வர்த்தகர்களும் சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.