இந்தியா

ஏழை மக்கள் பயன்படும் ஆயுஷ்மான் பாரத் திட்டம் தொடக்கம் !

ஏழை மக்கள் பயன்படும் ஆயுஷ்மான் பாரத் திட்டம் தொடக்கம் !

webteam

நாடு முழுவதும் 50 கோடி ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில், ஆயுஷ்மான் பாரத் எனப்படும் மருத்துவ பாதுகாப்புத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் தொடங்கி வைத்தார்.

ஆயுஷ்மான் பாரத் எனப்படும் இந்த மருத்துவப் பாதுகாப்புத் திட்டத்தின் மூல‌ம் ஓராண்டுக்கு, ஒரு குடும்பத்துக்கு 5 லட்சம் ரூபாய் வரை ஆகும் மருத்துவச் செலவுகளை அரசே ஏற்றுக் கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாட்டின் எந்தவொரு மூலையில் இருக்கும் அரசு மருத்துவமனைகளிலோ, அல்லது தனியார் மருத்துவமனைகளிலோ பயனாளர்கள் சிகிச்சை பெற்றுக் கொள்ள முடியும்.

இந்தப் புதிய திட்டத்தின் கீழ் மத்திய அரசுக்கு ஆண்டுதோறும் கூடுதலாக 3 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வரை செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் அடுத்த மூன்று மாதங்களுக்குள், அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே தமி‌ழகத்தில் நடைமுறையில் உள்ள முதல் அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்துடன், மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டமும் ஒருங்கிணைந்து செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.