இந்தியா

சித்தா, ஆயுர்வேதம், யுனானிக்கும் நீட்: மத்திய அரசு அடுத்த அதிரடி

சித்தா, ஆயுர்வேதம், யுனானிக்கும் நீட்: மத்திய அரசு அடுத்த அதிரடி

webteam

சித்தா, ஆயுர்வேதம் மற்றும் யுனானி படிப்புகளுக்கும் வரும் கல்வியாண்டு முதல் நீட் தேர்வு கட்டாயம் என்று மத்திய ஆயுஷ் துறை இணையமைச்சர் ஸ்ரீபத் யஸோ நாயக் தெரிவித்துள்ளார்.
 
அதேபோல யோகா மற்றும் இயற்கை முறை சிகிச்சை தொடர்பான படிப்புகளுக்கும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார். மத்திய அரசின் ஆயுஷ் துறைக்கு கீழ் வரும் அனைத்து படிப்புகளுக்கு 2018ம் கல்வியாண்டு முதல் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட இருப்பதாக அவர் தெரிவித்தார். மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டு, அதில் இருந்து விலக்கு அளிக்கும் மசோதாவை தமிழக அரசு நிறைவேற்றி அது நிலுவையில் உள்ளது. இதற்கிடையில் மதுரை உயர்நீதிமன்றக் கிளை நீட் தேர்வு முடிவை வெளியிட தடை விதித்துள்ளது. இது தொடர்பான வழக்கு ஒன்றில் சென்னை உயர்நீதிமன்றமும் நீட் தேர்வை ஏன் பிளஸ் டூ முடிந்ததும் நடத்தவில்லை? நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் இல்லாத நிலையில் நீட் தேர்வை மாணவர்கள் எப்படி எதிர் கொள்வார்கள்? என்று பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்த நிலையில் சித்தா, ஆயுர்வேதம் மற்றும் யுனானி ஆகிய படிப்புகளுக்கும் நீட் நுழைவுத் தேர்வை கட்டாயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.