இந்தியா

ஒரே நேரத்தில் 733 பேருக்கு சிகிச்சை: ஆயுர்வேத மாணவர்கள் கின்னஸ் முயற்சி

rajakannan

ஜெய்ப்பூர் நகரில் ஒரே நேரத்தில் அதிகம் பேர் சிகிச்சை எடுத்துக் கொண்டு ஆயுர்வேத மாணவர்கள் கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்கும் முயற்சியை மேற்கொண்டனர்.

தேசிய ஆயுர்வேதா நிறுவனத்தின் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நாடு முழுவதும் இருந்து ஆயுர்வேத மாணவர்கள் பங்கேற்றனர். இதில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 733 மாணவர்களுக்கு நாஸ்ய கர்மா என்ற சிகிச்சை அளிக்கப்பட்டது. நாஸ்ய கர்மா என்பது மூக்கின் வழியாக மூலிகை எண்ணெய்யை செலுத்துவதாகும். ஒரே சமயத்தில் 733 மாணவர்களுக்கு சுமார் 7 நிமிடங்கள் இந்த ஆயுர்வேத சிகிச்சையை செய்யப்பட்டது.

கின்னஸ் சாதனை புத்தகத்தின் அதிகாரப்பூர்வ ஆணையர் ஸ்வப்னில் தன்கரிகர் மாணவர்களுக்கு சான்றிதழை வழங்கினார். மாணவர்கள் நாஸ்ய கர்மா சிகிச்சை அளித்தது அனைவரையும் கவரும் வகையில் இருந்ததாக ஆணையர் கூறினார். ஆயுர்வேதா உலகின் மிகச்சிறந்த சிகிச்சை முறை என்று நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பலரும் தெரிவித்தனர்.