ராமர் கோவில் PT
இந்தியா

அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக அழைப்பு; வழிகாட்டி பலகையில் இடம்பெற்ற பலமொழிகள்!

Jayashree A

உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ஜனவரி 22 ஆம் தேதி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்களுக்கு அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளன. பல்லாயிரக்கணக்கான துறவிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பக்தர்களும் லட்சக்கணக்கில் அயோத்தியில் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் உலகம் முழுவதிலிருந்து அயோத்தியாவிற்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, 28 மொழிகளில் அவரவர்கள் புரிந்துக்கொள்ளும் வகையில் கோவில் நிர்வாகம் வழிகாட்டி பலகையை வைத்துள்ளது.

வழிகாட்டி பலகையில் இந்தி, உருது, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், குஜராத்தி, டோக்ரி என 22 இந்திய மொழிகளிலும், அராபிக், சைனீஸ், ஆங்கிலம், ப்ரெஞ்ச், ரஷ்யன் மற்றும் ஸ்பானிஷ் உள்ளிட்ட 6 வெளிநாட்டு மொழிகளிலும் வழிகாட்டும் பலகை வைக்கப்பட்டுள்ளது. எல்லா மொழிகளிலும் ஒரே பெயரான ராம் கி பாடி என்றே எழுதப்பட்டிருந்த பலகை ஒன்று வைரல் ஆக பகிரப்பட்டு வருகிறது.